இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடும்!



இந்து மதத்தின் சில உண்மைகளும், அமானுஷ்யங்களும் இன்றும் கூட அறிவியல் ரீதியாக பதில் தெரியதா புதிராக தான் காணப்படுகின்றது.
அவ்வாறான ஓர் இடம் தான் மகாராஷ்டிராவில் காணப்படும் “ஹரிஷ்சந்திரகட் கோயில்” 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் “கேதாரேஷ்வர்” என்ற ஆச்சரிய குகையினை காணலாம்.
குகைக்கு உள்ளே சென்றால் நம்மால் நீரினால் சூழப்பட்ட 5 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்தை பார்க்கலாம்.அதுமட்டுமல்லாது சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் காரணத்தினால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினம் தான். மேலும் மழைக்காலங்களில் இக் குகையை சென்றடைவது கணிப்புக்கு மீறிய விடயமே.
சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப் பெற்றுள்ளன. இவை “சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்” ஆகிய நான்கு யுகங்களை தெளிவு படுத்துவதாக கூறபடுகின்றது.
ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என நம்பப்பட்டு வருகின்றது.

Comments

Popular posts from this blog

Contact lenses bestow telescopic vision!

பாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது?

Malaysia Decides